நடிகை கீர்த்தி பாண்டியன்
சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.
பிறகு கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இவர் ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார்.
அசோக் பற்றி கீர்த்தி பாண்டியன்
இந்த நிலையில், கீர்த்தி பாண்டியன் தனது கணவர் அசோக் செல்வன் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், “அசோக் இயற்கையாகவே நல்ல குணம் உடையவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் ஒரு தங்கமான மனதை கொண்டவர். வாழ்க்கையாக இருந்தாலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி மிகவும் உறுதியாகவும், உண்மையாகவும் இருப்பார்”.
மேலும், “வீட்டில் சமைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என அனைத்து விஷயங்களையும் பிரித்துக்கொண்டுதான் செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.