ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். 50 – வயதை கடந்த நிலையிலும் இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக சினிமாவில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தியாவிலிருந்து பலர் உலக அழகி பட்டம் வென்றிருந்தாலும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த புகழ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
அந்த அளவிற்கு சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார்.
இவர் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.
அந்த பெண்
இந்நிலையில், அச்சு அசல் ஐஸ்வர்யா ராயைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பெண் பாகிஸ்தான் தொழிலதிபர் கன்வால் சீமா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ‘மை இம்பேக்ட் மீட்டர்’ டிஜிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு ஐஸ்வர்யா ராய் போலவே கூர்மையான மூக்கும், அழகான கண்களும் இருப்பதால் இவரின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாகி ஐஸ்வர்யா ராய் போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.