ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
பாலிவுட்டில் நடிக்க துவங்கிய இவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் குவிந்தனர். பின் தென்னிந்திய படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி கபூரை காணலாம் என கூறப்படுகிறது.
ஜான்வி கபூர் போலவே இருக்கும் பெண்
இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரை போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டு உள்ளனர். அது எப்படி ஜான்வி கபூர் போலவே அச்சு அசல் இருக்கிறாரே இந்த பெண் என கூறி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..
Jhanvi Kapoor In Parallel World 😁 pic.twitter.com/MRv92zFE2Y
— 𝐌𝐫. 𝐏𝐨𝐫𝐭𝐫𝐚𝐢𝐭 (@MrPortrait22) October 13, 2024