நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார்.
இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
மேலும் கேஜிஎப் யாசின் டாக்சிக் திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளாராம். இதை தவிர மூக்குத்தி அம்மன் 2, கவினுடன் ஒரு படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
வாணி போஜன்
சின்னத்திரையின் மூலம் பிரபலமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார் வாணி போஜன். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இது வாணி போஜன்-ஆ அல்லது நயன்தாராவா என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு அச்சு அசலாக நயன்தாரா போலவே வாணி போஜன் தோற்றமளிக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..