Thursday, April 24, 2025
Homeசினிமாஅஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. அறிவிப்பு இதோ

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. அறிவிப்பு இதோ


குட் பேட் அக்லி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணியில் உருவாகி ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.

ரிலீஸுக்கு இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில், இப்படத்திற்கான பிஸினஸ் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல், சாட்டிலைட் போன்ற ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது திரையரங்க உரிமைகளுக்கு பிசினஸ் நடைபெற்று வருகிறது.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. அறிவிப்பு இதோ | Jananayagan Producer On Ajith Good Bad Ugly

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, தமிழ்நாட்டில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்திருந்தது.

கர்நாடகா உரிமை

இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் கர்நாடகா உரிமையை யார் வாங்கியுள்ளார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கே.வி.என் நிறுவனம் இப்படத்தின் கர்நாடகா உரிமையை கைப்பற்றியுள்ளனர்.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. அறிவிப்பு இதோ | Jananayagan Producer On Ajith Good Bad Ugly

இதனை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் தான் தளபதி விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments