Friday, April 18, 2025
Homeசினிமாஅஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்


குட் பேட் அக்லி

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கண்டிப்பாக இது Fan Boy சம்பவமாக இருக்கும் என்பதை படத்தின் டீசரில் காட்டிவிட்டனர். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த முதல் பாடலும் வெறித்தனமாக இருந்தது.

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம் | Ajith Good Bad Ugly First Review

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் அஜித்துடன் த்ரிஷா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிறது. இந்த சமயத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தை பிஸினஸ் செய்வதற்காக முதல் 20 முதல் 30 நிமிடங்கள் கட் செய்து திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிடப்படும். அப்படி குட் பேட் அக்லி படத்தை திரையிட்டுள்ளனர்.

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம் | Ajith Good Bad Ugly First Review

அப்போது படத்தை பார்த்து முக்கிய நபர்கள் மிரண்டு போய் படம் தரமாக வந்துள்ளது என விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் படத்தின் பிஸினஸும் தீயாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. படத்தை பார்த்து மிரண்டு போன நிலையில், இந்த தகவல் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments