Tuesday, February 11, 2025
Homeசினிமாஅஜித்தின் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்


குட் பேட் அக்லி

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

தனக்கு பிடித்த நடிகரான அஜித்தை இப்படத்தில் இயக்கி வருகிறார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் நிலையில், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வித்தியாசமான கெட்டப்பில் இப்படத்தில் அஜித் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையையும் குறைத்துள்ளார்.

வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் திடீரென இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக் | Dsp Out Of Ajith Good Bad Ugly Movie

தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியுள்ள நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் அனிருத் இடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments