Sunday, December 22, 2024
Homeசினிமாஅஜித்தின் விடாமுயற்சி பட படப்பிடிப்பு அடுத்தடுத்து எப்போது, எங்கே நடக்கப்போகிறது... முழு தகவலை கூறிய பிரபலம்

அஜித்தின் விடாமுயற்சி பட படப்பிடிப்பு அடுத்தடுத்து எப்போது, எங்கே நடக்கப்போகிறது… முழு தகவலை கூறிய பிரபலம்


விடாமுயற்சி

அஜித்தின் துணிவு படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்டது.

இப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்க தொடங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் நடந்து வருகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து அஜர்பைஜானில் தான் நடந்து வருகிறது.

அங்கு ஒரு கார் சேஸிங் காட்சி படமாக்கப்பட்ட போது அஜித் மற்றும் ஆரவ் விபத்தில் சிக்கிய வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அதன்பிறகு இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.


லேட்டஸ்ட் தகவல்


இந்த நிலையில் மீண்டும் அஜர்பைஜானில் அஜித்தின் விடாமுயற்சி பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஒரு மாதம் அங்கு விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.

வரும் ஜுலை 22ம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்க பின் படக்குழு ஹைதராபாத் வர இருக்கிறார்களாம், அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்க முழு படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம். இந்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார். 

அஜித்தின் விடாமுயற்சி பட படப்பிடிப்பு அடுத்தடுத்து எப்போது, எங்கே நடக்கப்போகிறது... முழு தகவலை கூறிய பிரபலம் | Suresh Chandra About Vidamuyarchi Shooting Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments