அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க துவங்கிவிடுவார். ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தங்கையாக நடிக்க மாட்டேன்
நடிகர் அஜித்துடன் இணைந்து ஜோடியாக நடிக்க வேண்டும் என பல நடிகைகளுக்கு ஆசை இருக்கும். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் அஜித்தின் தங்கையாக நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் “தங்கையாக அல்ல, ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என கூறினார்.