Monday, February 17, 2025
Homeசினிமாஅஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. முதல் முறையாக இருவருக்கும் போட்டி

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. முதல் முறையாக இருவருக்கும் போட்டி


சிவகார்த்திகேயன் – அமரன்

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அமரன்.

இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்கே 23

அமரன் படத்தை தொடர்ந்து சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் எஸ்கே 23. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் கன்னட சென்சேஷனல் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. முதல் முறையாக இருவருக்கும் போட்டி | Good Bad Ugly Sk 23 Movie Clash

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளாராம்.

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்

அதே தேதியில் தான் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்பட்டு வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தை மே 1 அஜித் பிறந்தநாளில் வெளியிட்டு திட்டமிட்டுள்ளனர்.

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. முதல் முறையாக இருவருக்கும் போட்டி | Good Bad Ugly Sk 23 Movie Clash

2025ல் பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளிவரும் என அறிவித்து இருந்த நிலையில், விடாமுயற்சி தள்ளிபோனதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸும் தள்ளிப்போய் விட்டது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 23வது படமும் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ஒரே நாளில் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments