நடிகர் அஜித் கார் ரேஸிங் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே ரேஸிங் மீதும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அவர் பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் போன்ற மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், அவர் ஆரம்பகட்டத்தில் கார் ரேஸிங் மீது தான் வெறியாக இருந்தார்.
அஜித்தின் ரோல் மாடல்
நடிகர் அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்து இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் ஆன அவர் 1994ல் இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில் மரணமடைந்தார்.
‘அவர் கார் ரேஸர் என்பதால் மட்டும் பிடிக்கும் என்பதில்லை, அவர் ஒரு philosophical நபர். அவரது பேச்சு மிகவும் ஆழமானதாக இருக்கும். அவர் என்னுடைய ரோல் மாடல்’ என அஜித் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.