Tuesday, March 25, 2025
Homeசினிமாஅஜித் போன்று வசீகரமான நபரை பார்த்ததில்லை.. போட்டுடைத்த முன்னணி நடிகை

அஜித் போன்று வசீகரமான நபரை பார்த்ததில்லை.. போட்டுடைத்த முன்னணி நடிகை


ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ரெஜினா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ரெஜினா பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணலில் பேசிய ரெஜினா கசாண்ட்ரா விடாமுயற்சி படத்தை குறித்தும் அஜித் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” விடாமுயற்சி திரைப்படம் மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகியுள்ளது. மகிழ்திருமேனி மிகவும் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஜித் போன்று வசீகரமான நபரை பார்த்ததில்லை.. போட்டுடைத்த முன்னணி நடிகை | Actress Say Ajith Is A Charming Person

சரியான நேரத்தில் இந்த படம் வெளிவரும். நான் இதற்கு முன் அஜித் சாரை சந்தித்ததில்லை. ஆனால், என்னை சுற்றி அனைவரும் அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்.

ஷூட்டிங் அப்போது தான் எனக்கு புரிந்தது அது ஏன் என்று அவரை போன்ற ஒரு வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments