வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமானவர்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்குக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், அஜித் மடியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் யார் என கேட்டு வருகிறார்கள்.
அட்டகத்தி தினேஷ்
அவர் வேறு யாருமில்லை நடிகர் அட்டகத்தி தினேஷ் தான். ஆம், தற்போது லப்பர் பந்து படத்திற்கு பின் கெத்து தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தினேஷ் தனது சிறு வயதில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அட்டகத்தி தினேஷ் சிறு வயதில் இருந்தே நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகராம். ஒரு பேட்டியில், உங்களுக்கு தல-யா இல்லை இளைய தளபதியா என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த நடிகர் தினேஷ், ‘எப்பவும் தல தான்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நாயகனாக மாறியுள்ளார் நடிகர் தினேஷ்.