மஞ்சுவாரியர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் அசுரன், துணிவு
போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது, ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மிகவும் நன்றாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் மஞ்சு வாரியர்.
அமிதாப்பச்சன், பகத்பாசில் போன்ற நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வெளிவர உள்ள நிலையில், பல பேட்டிகளில் மஞ்சுவாரியர் கலந்து கொண்டு வருகிறார்.
அஜித் ரஜினி பற்றி மஞ்சுவாரியர்
அவ்வாறு ஒரு பேட்டியில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் மற்றும் அஜித்திடம் ஒரு பொதுவான குணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மஞ்சுவாரியர், “இவர்கள் அனைவருமே சினிமா துறையில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் இவர்கள் அதை எதையும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பாகவும், அன்பாகவும், அடக்கமாகவும் இருக்கிறார்கள்.
இந்த குணத்தை அவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.