Wednesday, October 9, 2024
Homeசினிமாஅஜித் ரசிகையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக உள்ளது..விஜய் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய முன்னணி நடிகை

அஜித் ரசிகையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக உள்ளது..விஜய் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய முன்னணி நடிகை


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தன் நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்தவர்.

இவர் நடிப்பில் கடந்த 5 – ம் தேதி GOAT படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்து விஜய் அவரது 69 – வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தைத்தொடர்ந்து விஜய் சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

நடிகை நஸ்ரியாவின் பதிவு

இந்த நிலையில், சினிமாவை விட்டு விஜய் விலக உள்ளது குறித்து நடிகை நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அஜித் ரசிகையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக உள்ளது..விஜய் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய முன்னணி நடிகை | Actress Nazriya Talk About Vijays Last Movie

அதில், நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தாலும், இது தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதை யோசிக்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments