சினேகா
புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த சினேகா தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அடுத்து நடிகை சினேகாவின் நடிப்பில் விஜய்யுடன் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகவுள்ளது. படங்களில் நடித்துவரும் சினேகா சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
அதோடு சொந்தமாக புடவை கடையையும் திறந்துள்ளார்.
ஒர்க்அவுட்
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சினேகா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது வேர்வை சிந்த கடுமையாக ஹெவி ஒர்க்அவுட் செய்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் என்னது சினேகா இவ்வளவு ஹெவி ஒர்க்அவுட் செய்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.