Wednesday, March 26, 2025
Homeசினிமாஅடுத்த கட்டத்துக்கு சென்ற சர்தார் 2 படத்தின் பணிகள்.. வைரலாகும் புகைப்படங்கள்

அடுத்த கட்டத்துக்கு சென்ற சர்தார் 2 படத்தின் பணிகள்.. வைரலாகும் புகைப்படங்கள்


கார்த்தி

நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.

இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போது கார்த்தியின் காலில் காயம் ஏற்பட சில நாட்கள் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அடுத்த கட்டம்

அதுவரை நேரத்தை வேஸ்ட் செய்ய விரும்பாத படக்குழு படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கிவிட்டனர். அதாவது, நேற்று பூஜையுடன் சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளனர்.

அடுத்த கட்டத்துக்கு சென்ற சர்தார் 2 படத்தின் பணிகள்.. வைரலாகும் புகைப்படங்கள் | Karthi Movie Dubbing Photos

முதலில் கார்த்தி நடித்த காட்சிகளுக்கான டப்பிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அடுத்த கட்டத்துக்கு சென்ற சர்தார் 2 படத்தின் பணிகள்.. வைரலாகும் புகைப்படங்கள் | Karthi Movie Dubbing Photos 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments