Monday, February 17, 2025
Homeசினிமாஅடுத்த வாரம் முத்துவின் அதிரடி இருக்கா, மனோஜ், ரோஹினி சிக்குவார்களா? சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ...

அடுத்த வாரம் முத்துவின் அதிரடி இருக்கா, மனோஜ், ரோஹினி சிக்குவார்களா? சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ கொடுத்த க்ளூ


சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டிஆர்பி டாப் சீரியல்களில் ஒன்றாக இருப்பது சிறகடிக்க ஆசை. முத்து-மீனா இருவரை மையப்படுத்திய கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இன்றைய எபிசோடில், மனோஜ்-ரோஹினி புதிய வீட்டிற்காக அட்வான்ஸ் கொடுக்கும் கலாட்டாக்கள் தான் இடம்பெறுகின்றன. 

ரோஹினி-மனோஜ் கோவில் சாமி கும்பிட வரும்போது ஒரு தடங்கல் நடக்க அது சரியான சகுனம் இல்லை என மீனா அவர்களிடம் கூறுகிறார். வழக்கம் போல் அவர்கள் மீனாவிற்கு பொறாமை என்று கூறி அட்வான்ஸை அந்த வீட்டுகாரரிடம் கொடுத்து விடுகிறார்கள். 

அடுத்த வாரம்

எபிசோட் முடிந்து அடுத்த வார புரொமோவில், முத்துவிற்கு லண்டன் கார பெண் அதாவது ஜீவா போன் செய்து சென்னை வருவதாக கூறுகிறார். ஜீவா, முத்துவுடன் காரில் வரும்போது கடந்த முறை வந்தபோது இரண்டு பிராடுகள் என்னிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என கூறுகிறார். 

முத்துவோ அது யார் என்று கூறுங்கள், நமக்கு எல்லா இடத்திலும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர். 

இந்த புரொமோவை பார்க்கும் போது அடுத்த வாரம் பணம் வாங்கிய உண்மை தெரிந்து முத்துவின் அதிரடி இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments