Mr & Mrs சின்னத்திரை
விஜய் டிவியில் ஜோடி நம்பர் என தொடங்கி சூப்பர் சிங்கர், பிக்பாஸ், நீயாநானா, ஸ்டார்ட் மியூசிக், அது இது எது, கலக்கப்போவது யாரு என இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் கலக்கிய பலர் இப்போது சினிமாவில் நல்ல இடத்தில் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளை போல ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி என்றால் அது Mr & Mrs சின்னத்திரை தான், இந்த ஷோவின் 5வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டது.
போட்டியாளர்கள்
மாகாபா ஆனந்த் மற்றும் நிஷா இருவரும் இந்த ஷோவை தொகுத்து வழங்க கோபிநாத் மற்றும் ராதா நடுவர்களாக உள்ளனர்.
தொகுப்பாளர், நடுவருக்கான 2 புரொமோக்கள் வந்த நிலையில் முதல் 5 போட்டியாளர்களின் விவரத்தோடு ஒரு புரொமோ வந்துள்ளது.
நாஞ்சில் விஜயன்-மரியா, இந்திரஜா-கார்த்திக், நவீன்-சௌமியா, ஆஷிக்-சோனு மற்றும் மீராகிருஷ்ணா-சிவகுமார் ஆகியோர் பங்குபெற உள்ளனர். இதோ போட்டியாளர்களின் புரொமோ,