பிக்பாஸ்
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக கீர குழம்பு, பேர்ட்ஸ், லிட்டில் பிரின்சஸ் என ஏகப்பட்ட தியேட்டர் டிராமாக்களை நடத்தி வந்தவர் மாயா கிருஷ்ணன்.
பின் 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வானவில் வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனுஷின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், மை சன் இஸ் கே, ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, 2.0, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
அதன்பின் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
லேட்டஸ்ட் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று பார்த்தால் ஒரே ஜாலி மூடில் டூர் சென்ற வண்ணம் உள்ளார்.
அண்மையில் அட்லாண்டிக் கடலுக்கு சுற்றுலா சென்றவர் அங்கு நீச்சல் உடையில் கிளாமரான உடை அணிந்து செய்த அட்டகாசங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அவரது வீடியோவிற்கு கலவையான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.