வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ரஜினி ஹீரோவாக நடித்து ரிலீஸாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அட்வான்ஸ் புக்கிங்
கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் வேட்டையன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஓப்பன் ஆகிவிட்டது. வெளிநாடுகளிலேயே பட்டையை கிளப்பி வந்த வேட்டையன் தற்போது உலகளவில் அனைத்து இடங்களில் அட்வான்ஸ் புக்கிங்கில் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
வேட்டையன் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், இதுவரை உலகளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாளே வேட்டையன் படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.