அரவிந்த் சாமி
80, 90களில் பல இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி.
இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட அதனால் உடல் எடை கூடி, தலைமுடி எல்லாம் கொட்டி மொத்தமாக மாறினார்.
இப்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து செம ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இன்று அரவிந்த் சாமி கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள மெய்யழகன் படம் வெளியாகியுள்ளது.
மகன் போட்டோ
அரவிந்த் சாமியை நாம் சினிமாவில் அதிகம் கொண்டாடுகிரோம், ஆனால் அவரது குடும்பம் பற்றி வெளியே அவ்வளவாக தகவல்கள் வந்தது இல்லை.
இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் நன்றாக வளர்ந்து அடுத்த அரவிந்த் சாமி வீட்டின் நாயகன் போல் காணப்படுகிறார்.