அதிக சம்பளம்
சினிமாவில் தன் நடிப்பு திறமை மூலம் நடிகர்களுக்கு சமமாக வலம் வருகிறார்கள் நடிகைகள். அதிலிலும் பாலிவுட் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இணைந்து இருக்கிறார்கள்.
இவர் தான்
ஆனால், அந்த பட்டியலில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளான தீபிகா, ஆலியா இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், அந்த நடிகை பாலிவுட், ஹாலிவுட் என பல ஹிட் படங்களை கொடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இவர் ஹாலிவுட்டில் நடித்த பேவாட்ச் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் முதலில் தமிழில் தமிழன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி. மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி போன்ற பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். அதன்பிறகு, இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் இவர் பாலிவுட்டில் ஒரு படத்திற்கு ரூ.14 முதல் ரூ.20 கோடிகள் வாங்கி அதிக சம்பளம் வாங்கும் நடிகை என பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.