திரௌபதி
பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இப்படத்தை தொடர்ந்து, 2020 ம் ஆண்டு திரௌபதி என்ற படத்தை இயக்கினார்.
இப்படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி மற்றும் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து இப்படத்தில் கருணாஸ், நிஷாந்த், கே எஸ் ஜி வெங்கடேஷ், சௌந்தர்யா, லீனா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திரௌபதி 2 – ம் பாகத்தை எடுக்க இயக்குநர் முடிவெடுத்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் அவரது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்.. இந்த ஆண்டு இறுதியில், @richardrishi அவர்களின் நடிப்பில், @GhibranVaibodha அவர்களின் இசையில் திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் #திரெளபதி2 🙏❤️@DoneChannel1… pic.twitter.com/UVNCQvnuoC
— Mohan G Kshatriyan (@mohandreamer) February 26, 2025