Thursday, April 24, 2025
Homeசினிமாஅதில் அவ்வளவு பிரச்சனை, சீரியலில் இருந்து விலக.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்

அதில் அவ்வளவு பிரச்சனை, சீரியலில் இருந்து விலக.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்


எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் 4 பெண்களின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரம் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை ஹரிப்பிரியா.


நடிகையின் பேச்சு

அண்மையில் ஒரு விருது விழாவில் நடிகை ஹரிப்பிரியாவிற்கு விருது கொடுக்கப்பட்டது. அப்போது அவர், உனக்காக நான் இருக்கிறேன், உன் கூடவே கடைசி வரைக்கும் வருவேன் என கூறி ஏமாற்றாதீர்கள்.

அதில் அவ்வளவு பிரச்சனை, சீரியலில் இருந்து விலக.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக் | Serial Actress Haripriya Emotional Award Ceremony

பெண்களுக்கு நீங்கள் தான் எப்போதும் தைரியம் என்று சொல்லி வளருங்கள், அடுத்தவர்களை சார்த்து இருக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.
எனது வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறேன், அதற்கு என் மகன் தான் காரணம்.

என்னுடைய உடம்பில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை விதமான பிரச்சனைகள் இருக்கிறது.

அதில் அவ்வளவு பிரச்சனை, சீரியலில் இருந்து விலக.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக் | Serial Actress Haripriya Emotional Award Ceremony


எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்று இந்த நிகழ்ச்சியில் கூட இயக்குனரிடம் கூறினேன், பலமுறை கூறியுள்ளேன்.

ஆனால் சிலருடைய அன்பு நம்மை மீண்டும் எழுந்து ஓட வைத்துவிடுகிறது, அப்படி தான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments