சில்க் ஸ்மிதா
80களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர் என்று சொல்லலாம்.
சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டை வாங்க தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்றனர். அந்த அளவுக்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார் சில்க் ஸ்மிதா, 1996 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் தற்போது வரை மர்மமாகவே உள்ளது.
காதல்
இந்நிலையில் பிரபல நடிகர் ஜி எம் குமார், நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், சில்க் ஸ்மிதா மாதிரி ஒரு தங்கமான பொண்ணே கிடையாது.
அவர் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் நடிகை பல்லவியோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இல்லையென்றால் நானே சில்க் ஸ்மிதாவை காதலித்திருப்பேன் என்று ஜி.எம்.குமார் கூறினார்.