கே.ஜி.எப் புகழ் யாஷ்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றியடைந்த கே.ஜி.எப் திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் பான் இந்தியா நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.
இப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கே.ஜி.எப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் டாக்சிக்.
மனைவி குறித்து யாஷ்
இப்படத்தை பிரபல இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யாஷ் அவர் மனைவி ராதிகா குறித்து சில தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், “எனக்கு ராதிகா போன்ற ஒரு மனைவி கிடைத்தது என் பாக்கியம். நான் நடிக்கும் படங்களில் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது. அல்லது நான் தேர்வு செய்யும் படங்கள் குறித்தோ எந்த கேள்வியும் கேட்காத ஒரே மனிதர் என் மனைவி மட்டும் தான்.
அவருக்கு நான் நடிக்கும் படங்கள் எனக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தால் மட்டும் போதும் வேறு எது பற்றியும் அவர் கவலை கொள்ள மாட்டார்.
என் மீது அதிக அளவில் அன்பு கொண்டவர்.
அவருடன் நான் நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஒரே ஆசை மட்டும் தான் ராதிகாவுக்கு ஆனால், என்னால் அதை கூட அவருக்காக செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார்.