அந்தகன்
இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
இந்த படத்தை டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
அந்தகன் படத்தின் படப்பிடிப்பு 2021ல் தொடங்கி 2022ல் முடிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணத்தால் இந்த படம் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில், இந்த படம் இன்று அதாவது ஆகஸ்ட் 9 வெளியாகி உள்ளது.
சிம்ரன் பேச்சு
இதற்கு முன், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை சிம்ரன் பல விஷயங்களை பேசியிருந்தார்.
அதில், தியாகராஜன் சார் என்னை நம்பியதற்கு நன்றி. இந்த படம் எனது வாழ்க்கையில் சிறந்த படம் என்றும், அந்தகன் படத்தை பலமுறை பார்க்கலாம் என்றும், இந்த படத்தில் நான் மிகவும் தீவிரமாக நடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த படம் ஒரு ரீமேக் படமாக இல்லாமல் சிறந்த படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.