பிரியா பவானி ஷங்கர்
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும்பிரபல நடிகைகளின் லிஸ்டில் இணைந்துவிட்டார் பிரியா பவானி ஷங்கர். அவருடைய வளர்ச்சி கேற்ப அடிக்கடி விமர்சனங்களிலும் சிக்கி கொள்கிறார்.
தற்போது நடிகர் அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தில் பிரியா பவானி முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக இருக்கிறது.
வேதனை!
இந்நிலையில் டிமான்ட்டி காலனி படக்குழு செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பிரியா பவானியிடம் அவர் மீது எழும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டார்கள்.
இதற்கு பதில் அளித்த அவர், எல்லாரும் மனுஷங்க தானே. சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்களை பார்க்கும் போது கஷ்டமாக தான் இருக்கும்.
படம் பற்றி வரும் விமர்சனங்கள் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, ஆனால் அது நெகட்டிவ்வாக இருந்தாலும் பாசிட்டிவ்வாக இருந்தாலும் அது விமர்சனம். அதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் நம்மால் வளர முடியும்.
ஆனால் டிஜிட்டல் மீடியாவில் முகமே தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது என்று பிரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார்.