கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி – 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கீர்த்தியின் ஆசை
இவர் தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் – 15 அதாவது நாளை ரிலீஸாகிறது.
தற்போது, இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டுள்ள கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க தனக்கு ஆசை எனவும், அவ்வப்போது கதை எழுதுவேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.