இந்தியன் 2
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 கடந்த 12 -ம் ஆண்டு வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இந்த படத்திற்கு, கலவையான விமர்சனமே கொடுத்திருந்தனர்.
மேலும் இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள கதறல்ஸ் பாட்டுக்கு பிரியா பவானி நடனமாடிய வீடியோ பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். இதற்கு பிரியா பவானி, அடப்பாவிங்களா? என்று ரிப்ளை கொடுத்தார்.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், தனக்கு வந்த ட்ரோல் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், இந்தியன் 2 படம் வெளியான பின்னர் என்னை பலரும் மோசமாக ட்ரோல் செய்தனர். அது நிச்சயம் என்னைக் காயப்படுத்துகிறது. கமல் ஹாசன் சார், ஷங்கர் சார் பட வாய்ப்பை எந்த நடிகை வேண்டாம் என்று சொல்வார்கள். மீண்டும் ஷங்கர், கமல் ஹசான் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பார்வையாளர்கள் எதிர்பார்த்ததைத் நான் திருப்திப்படுத்தாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார்.