அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் ரோலில் கச்சிதமாக நடித்து இருந்ததாக ரசிகர்களும் மற்ற சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் முகுந்த் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் ரோலில் நடித்து இருந்த சாய் பல்லவியின் நடிப்பை பற்றி பலரும் வியந்து பேசி வருகின்றனர்.
ஜோதிகா பதிவு
அமரன் படத்தை பார்த்த நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பாராட்டி பதிவிட்டு இருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு அடுத்து தமிழ் சினிமாவில் இன்னொரு classic படம் என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் படத்தின் கடைசி 10 நிமிடத்தில் சாய் பல்லவியின் நடிப்பு தன் இதயத்தை வென்றுவிட்டது என ஜோதிகா கூறி இருக்கிறார். பெருமையாக இருக்கிறது என்றும் சாய் பல்லவியை அவர் பாராட்டி இருக்கிறார்.