Sunday, December 8, 2024
Homeசினிமாஅந்நியன் பட குட்டி அம்பியை நினைவிருக்கா.. முன்னணி நடிகரின் நெருங்கிய சொந்தமாம் யார் தெரியுமா

அந்நியன் பட குட்டி அம்பியை நினைவிருக்கா.. முன்னணி நடிகரின் நெருங்கிய சொந்தமாம் யார் தெரியுமா


நடிகர் விராஜ்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகரானார் விராஜ்.

இவர் சிறுவயது முதல் பல படங்களில் நடித்து வந்தார் ஆனால், அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.அந்த படத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்நியன் படத்தை தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தார்.

இந்த படத்தில் விராஜ் நடிப்பு சிறந்து விளங்கியதால் அடுத்து சென்னை 28 படத்தின் 2 – ஆம் பாகத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

விஜய்யின் தாய் மாமாவின் மகன்

இந்த நிலையில், விராஜ் மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், விஜய்யின் அம்மாவான ஷோபாவும், விராஜின் தந்தையும் பிரபல பாடகருமான எஸ்.என். சுரேந்தரும் உடன் பிறந்தவர்கள்.

அந்நியன் பட குட்டி அம்பியை நினைவிருக்கா.. முன்னணி நடிகரின் நெருங்கிய சொந்தமாம் யார் தெரியுமா | Anniyan Movie Ambi Is A Close Relative Of Vijay

அந்த வகையில், சுரேந்தர் விஜய்க்கு தாய் மாமா ஆவார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தாய் மாமா மகன் விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments