சமந்தா
சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சாதிப்பவர்கள் பலர், அதில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என கலக்கியவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கேயும் பெரிய அளவில் அவர் வலம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.
நடிகை பேச்சு
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்தீர்களே, நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா? என்ற கேள்விக்கு, நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டியிருந்தது.
அப்படி செய்யாமல் இருந்தது மிகவும் தவறு, ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று கூறியுள்ளார்.