காஜல் பசுபதி
காஜல் பசுபதி, சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார்.
அப்படியே சினிமா பக்கம் வந்தவர் முதன்முறையாக கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்தார்.
பின் டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பிஸியாக நடித்து வந்தவருக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்தார்கள், ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
இப்போது சாண்டி இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
காஜல் ஓபன்டாக்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிகம் பிரபலமான காஜல் பசுபதி தல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கையில் 3, 4 காதல் வந்தது, அது எல்லாமே சாண்டிக்கு தெரியும்.
நான் காதலித்தவர்கள் என்னை பிரிந்த போக காரணமே நான் அவர்கள் மீது அதிகம் பொசஸீவாக இருந்தது தான்.
சாண்டிக்கு பிறகு நான் ஒருவரை காதலித்தேன், அவர் மீது அதிக பொசஸ்னஸ் இருக்க கூடாது என்று நினைத்து இருவரும் முழு ஃப்ரீடமாக இருப்போம் என்று பேசினோம்.
ஆனாலும் அவர் நீ ஏன் அவங்கள காதலித்த மாதிரி என்னை காதலிக்கல என்று என்னை அடிப்பான், 4 வருடங்கள் ஒரு நபரை காதலித்தேன், அவர் என்னுடைய பிறந்தநாள் அன்று மனதில் இருந்த மொத்த கோவத்தையும் கொட்டி என்னை அடித்தார்.
இரவு முழுக்க என்னை அடித்துவிட்டு அடுத்த நாள் நான் அவரை அடித்தேன் என்று வெளியே போய் சொல்லிவிட்டான் என காஜல் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.