நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் ரோலில் நடித்து இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ஹீரோவான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதில் பெருமை என சிவகார்த்திகேயன் தொடர்ந்து கூறி வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் நிஜமான மிலிட்டரி பகுதியில் தான் நடைபெற்றது என்றும், ஷூட்டிங்கின் போது நிஜ மிலிட்டரி தங்களுக்கு மொழி புரியவில்லை என்றாலும் புல்லரிப்பதாக கூறினார்கள் எனவும் சிவகார்த்திகேயன் கூறி இருந்தார்.
அப்பா இறப்பு..
எனது அப்பாவும் வேலையில் இருக்கும்போது தான் இறந்து போனார். அவருக்கு 50 வயதில் திடீரென ஒருநாள் இறந்துவிட்டார்.
அவர் போருக்கு போகவில்லை, சண்டை போடவில்லை.. ஒர்க் பிரெஷர் தான் அவர் இறப்புக்கு காரணம்.
எதை வேண்டுமானால் தாங்கலாம், ஆனால் ஒருவர் இல்லாததை தாங்கவே முடியாது. அப்படி தான் முகுந்த் வரதராஜன் மனைவிக்கு இருந்திருக்கும் என சிவகார்த்திகேயன் எமோஷ்னலாக கூறி இருக்கிறார்.