Thursday, January 2, 2025
Homeசினிமாஅமரன் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய விமர்சனம்! கண் கலங்கிடுச்சு

அமரன் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய விமர்சனம்! கண் கலங்கிடுச்சு


சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருக்கும் அமரன் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையை தான் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

நேற்று இரவு அமரன் படம் ஸ்பெஷல் காட்சி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டு இருக்கிறது. அவர் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிவிட்டாராம். “கிளைமாக்ஸ் ரொம்ப touching ஆக இருந்தது. கண் கலங்கிவிட்டேன்” என அவர் கூறினாராம்.

ட்விட்டரில் பதிவு

அமரன் படம் பற்றி முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,
மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

“நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute.”
இவ்வாறு ஸ்டாலின் கூறி இருக்கிறார்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments