ஹரிஷ் கல்யாண்
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி கடந்த செப்டம்பர் 20 – ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.
இந்த திரைப்படம் கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜ பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
வெறும் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் ரூ 40 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
லப்பர் பந்து
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தை விட அதிக வசூல் செய்த படங்கள் அதிகம் இருப்பினும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படமாக லப்பர் பந்து திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் மட்டுமில்லாமல் OTT தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் சமீபத்தில் வெளியான அமரன் மற்றும் GOAT திரைப்படங்கள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.