Monday, March 24, 2025
Homeசினிமாஅமலாக்கத்துறை விசாரணை.. இதற்கிடையே நடிகை தமன்னா செய்த அதிர்ச்சியளிக்கும் செயல்

அமலாக்கத்துறை விசாரணை.. இதற்கிடையே நடிகை தமன்னா செய்த அதிர்ச்சியளிக்கும் செயல்


நடிகை தமன்னா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.



இவர் மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியான பேர்பிளே என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும்.

இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த செயலி தொடர்பான விளம்பரத்தில் நடித்ததற்காக தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார். அங்கு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த விசாரணை குறித்து எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை.

 தமன்னா செய்த செயல்  

இதற்கிடையே, நடிகை தமன்னா அவரது பெற்றோருடன் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள பிரபல காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணை.. இதற்கிடையே நடிகை தமன்னா செய்த அதிர்ச்சியளிக்கும் செயல் | Tamannaah Went To Temple

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது, தமன்னா ‘ஓடேலா 2’ என்ற தெலுங்கு மொழி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments