Saturday, October 5, 2024
Homeசினிமாஅமிதாப் பச்சன் யார் தெரியுமா.. ராஜிவ் காந்தி உடன் பள்ளிக்கு சென்றவர்! - புகழ்ந்த ரஜினிகாந்த்

அமிதாப் பச்சன் யார் தெரியுமா.. ராஜிவ் காந்தி உடன் பள்ளிக்கு சென்றவர்! – புகழ்ந்த ரஜினிகாந்த்


வேட்டையன் படத்தில் ரஜினி உடன் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித்து இருக்கிறார். இன்று வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது அமிதாப் பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

இப்போதைய 2k குழந்தைகளுக்கு அமிதாப் யார் என தெரியாது. அமிதாப் பச்சன் அப்பா ஒரு பெரிய ரைட்டர். அவர் அம்மா இந்திரா காந்திக்கு நெருக்கமானவர். அமிதாப்பும் ராஜிவ் காந்தியும் ஒன்றாக பள்ளிக்கு சென்றவர்கள். இது பலருக்கும் தெரியாது.

1969ல் அமிதாப் நடிக்க விரும்பியபோது பெற்றோர் ஆதரவு இல்லை. பணம் தர மாட்டோம், குடும்ப பெயரை பயன்படுத்த கூடாது என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அமிதாப் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை செய்து முன்னேறி பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்.

“பெற்றோர்களே குழந்தைகளுக்கு பணம் கொடுக்காதீங்க, நல்ல குணம் கொடுங்க” என ரஜினி கூறி உள்ளார்.

சிரித்தார்கள்..

அமிதாப் படங்கள் தயாரித்து பெரிய நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார். அவரது வீடு ஏலத்திற்கு வந்து இருக்கிறது. எல்லோரும் அவரை பார்த்து சிரித்தார்கள்.

3 ஆண்டுகளில் விளம்பரங்கள், KBC ஷோ போன்றவற்றில் சம்பாதித்து அதே தெருவில் இருக்கும் மூன்று வீடுகளையும் திரும்ப வாங்கினார். 82 வயதிலும் தினமும் 10 மணி நேரம் வேலை செய்கிறார் அமிதாப் என ரஜினி அவரை மேடையில் பாராட்டி இருக்கிறார். 

அமிதாப் பச்சன் யார் தெரியுமா.. ராஜிவ் காந்தி உடன் பள்ளிக்கு சென்றவர்! - புகழ்ந்த ரஜினிகாந்த் | Rajinikanth Talks About Amitabh At Vettaiyan Al

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments