Friday, January 17, 2025
Homeசினிமாஅம்பானி திருமணத்தில் அட்லீ செய்த மாஸ் சம்பவம்.. வியந்து பார்க்கும் இந்திய சினிமா

அம்பானி திருமணத்தில் அட்லீ செய்த மாஸ் சம்பவம்.. வியந்து பார்க்கும் இந்திய சினிமா


இயக்குனர் அட்லீ

அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஜவான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் ரேஞ்ச் வேற லெவலுக்கு சென்றுவிட்டது.



தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் தொடர்ந்து 4 வெற்றி படங்களை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றார் அட்லீ. ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து ஜவான் திரைக்கு வந்தது.

உலகளவில் இப்படம் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்று, அங்கு ஒரு தமிழ் இயக்குனர் இவ்வளவு பெரிய சாதனை செய்வது என்பது எளிதான விஷயம் இல்லை.



இப்படத்தின் வெற்றி இந்தியளவில் அட்லீக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணத்திற்கு தனது மனைவியுடன் சென்று கலந்துகொண்டார் இயக்குனர் அட்லீ.

அட்லீ செய்த சம்பவம்



இவர் அந்த திருமணத்திற்கு சென்றது மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அவர் அந்த திருமணத்திற்காக 10 நிமிடங்கள் கொண்ட அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி, அதனை திருமணத்தில் திரையிட்டுள்ளனர்.

அம்பானி திருமணத்தில் அட்லீ செய்த மாஸ் சம்பவம்.. வியந்து பார்க்கும் இந்திய சினிமா | Atlee Animation Film In Anant Ambani Marriage

இந்த அனிமேஷன் படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாராம்.

இந்த விஷயத்தை அந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது அட்லீயை இந்திய ரசிகர்கள் மத்தியில் வியந்து பார்க்க வைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments