Sunday, December 8, 2024
Homeசினிமாஅம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்?- நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்?- நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்


ஆனந்த்-ராதிகா

2024 புது வருடம் தொடங்கியதில் இருந்தே ஒரே ஒரு ஜோடியின் திருமணம் குறித்து தான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.

வேறுயாரு இந்தியாவில் மிகவும் பணக்கார குடும்பமான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் திருமணம் படு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜுலை 12ம் தேதி இந்திய சினிமா பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு முன்பு தான் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் திருமணம் முடிந்த பிறகும் நிறைய ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.

ரஜினி பேச்சு

படத்தை தாண்டி எந்த ஒரு திருமணத்திலும் நடனம் ஆடாத நடிகர் ரஜினிகாந்த் அம்பானி மகன் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வந்தது.

சென்னை வந்த ரஜினியிடம் நடனம் குறித்து கேட்டபோது, இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம், அதனால் இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தேன்.

மேலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது என கூறியுள்ளார். 

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்?- நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக் | Rajinikanth About His Dance In Ambani Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments