Sunday, September 8, 2024
Homeசினிமாஅம்பானி வீட்டு திருமணம்.. அதிக மதிப்புள்ள உடையில் வந்த அட்லீ மனைவி! விலை இவ்வளவா?

அம்பானி வீட்டு திருமணம்.. அதிக மதிப்புள்ள உடையில் வந்த அட்லீ மனைவி! விலை இவ்வளவா?


அம்பானி 

உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருந்த நிலையில், இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்தார்.



ராதிகாவும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண் ஆவார். இவர் மருத்துவ துறையில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டாரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆனந்த் – ராதிகாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது.


திருமணம் முடிவானதும் இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. ப்ரீ வெட்டிங்கிற்கே சொகுசு கப்பலா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவில் நடத்தப்பட்ட ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகளும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது.


மேலும், இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரையுலகமும் திரண்டு சென்று கலந்துகொண்டது. அதை தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார்.



அதேபோல், அட்லீ தனது மனைவியுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அணிந்த ஜாக்கெட்டில் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்த வாசகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த உடை பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை 


இந்நிலையில் அவர் அந்தத் திருமணத்துக்கு அணிந்து சென்ற உடையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ப்ரியா அணிந்து சென்ற அந்த ஆடையின் விலை மட்டும் மூன்று லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அம்பானி வீட்டு திருமணம்.. அதிக மதிப்புள்ள உடையில் வந்த அட்லீ மனைவி! விலை இவ்வளவா? | Priya Dress Rate In Anand Ambani Wedding

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments