Wednesday, March 26, 2025
Homeசினிமாஅம்மாவின் கடனை அடைக்க சினிமா வந்தேன்.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சூர்யா

அம்மாவின் கடனை அடைக்க சினிமா வந்தேன்.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சூர்யா


சூர்யா 

நடிகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் சூர்யா. ஆரம்பத்தில், பல கேலி கிண்டலுக்கு ஆளான சூர்யா அவற்றை குறித்து பெரிதும் கவலை கொள்ளாமல் கடின உழைப்பாலும், நம்பிக்கையாலும் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

40 – க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த இவர் நடிப்பில் வரும் நவம்பர் 14 – ம் தேதி கங்குவா படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ளது.

தற்போது, இந்த படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா சினிமா துறைக்கு வந்ததற்கான காரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அம்மாவின் கடன்

அதில், “என் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் ரூ. 25,000 கடன் வாங்கியதாக என்னிடம் தெரிவித்தார். நான் பெரிய நடிகரின் மகன் என்பதால் எனக்கு பல படத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது.

அம்மாவின் கடனை அடைக்க சினிமா வந்தேன்.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சூர்யா | Suriya Came Cinema For His Mother

என் அம்மாவிடம் சென்று உங்கள் கடனை நான் அடைகிறேன் என்று சொல்வதற்காக தான் நான் சினிமா துறைக்கு வந்தேன். அவ்வாறு தான் இன்று சூர்யாவாக உங்கள் முன் நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments