சீரியல் நடிகை
சன் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமான கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி சன் டிவி ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ராணி.
அலை என்ற தொடரில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த இவர் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி, பாண்டவர் இல்லம், முன் ஜென்மம், பூவே உனக்காக, குலதெய்வம், ரோஜா, சந்திரலேகா என நிறைய தொடர்கள் நடித்த வண்ணம் இருக்கிறார்.
சிறுவயது
என் அம்மா நான் படித்துக்கொண்டிருந்த போதே இறந்துவிட்டார், அக்கா, தங்கை என பெண்கள் இருந்ததால் கல்லூரி படிக்கம் போதே எனக்கு திருமணம் நடந்துவிட்டது.
மகன் பிறந்த பிறகு நடிக்க வந்தேன், கடவுள் அருளால் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என் அப்பா நான் வளர்ந்தது, படித்தது, கல்யாணம், நடித்தது, என் கணவர், குழந்தைகள் என எதையுமே பார்க்கவில்லை.
இது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சோகம் என வருத்தமான விஷயத்தை கூறியுள்ளார்.