Monday, March 17, 2025
Homeஇலங்கைஅரகலய – வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து மனு தாக்கல்

அரகலய – வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து மனு தாக்கல்


2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது ​​வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள் மூலம் பெறப்பட்ட எந்தவொரு நிதியையும் திரும்பப் பெற உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவீந்திரநாத் தாபரே இன்று செவ்வாய்க்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தற்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட பதினைந்து பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அண்மையில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இதன்படி, முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் மொத்தமாக 1.224 பில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.

இயற்கை பேரழிவின் போது முழுமையான சொத்து இழப்பீட்டிற்கே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை. 2.5 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டிய அமைச்சர் முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் மிகவும் அதிகளவான இழப்பீட்டைப் பெற அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments