உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதால், அரசாங்க அச்சுத் திணைக்கள இயக்குநர் பிரதீப் புஷ்பகுமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு வெளியே பாதுகாப்பை வழங்குவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படை நடமாடும் ரோந்துகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சு திணைக்களத்தின் இயக்குநர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று (23) தொடங்கியது.
மேலும், அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் 1,200 ஊழியர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.