Saturday, December 7, 2024
Homeசினிமாஅரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா

 நடிகர் விஜய்யின் GOAT படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது GOAT ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. அந்த ட்ரெய்லரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா?

அரசியல் குறியீடு

விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில் கோட் படத்திலும் நிச்சயம் அரசியல் பற்றிய விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ட்ரெய்லரில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கிறது.

“உங்களை lead பண்ண போறது ஒரு புது leader” என விஜய்யின் அரசியல் என்ட்ரியை குறிப்பிடும் வகையில் வசனம் இருக்கிறது.

ஆன்மீகம்

அரசியல் மட்டுமின்றி ஆன்மீகமும் ட்ரெய்லரில் இடம்பெற்று இருக்கிறது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என கில்லி பட பாணியில் விஜய் பாடுவதும் ட்ரெய்லரில் இடம்பெற்று இருக்கிறது.

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

இளம் விஜய்

இந்த படத்தில் விஜய் டபுள் ரோலில் நடித்து இருக்கிறார். விஜய்யை CG மூலமாக இளம் வயது தோற்றத்துக்கு மாற்றி இருக்கிறார்கள்.

அதன் புகைப்படங்கள் இதோ.

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

பிரேம்ஜி.. MSD Forever

வெங்கட் பிரபு படத்தில் பிரேம்ஜி இல்லாமல் இருக்குமா. அவரையும் ட்ரெய்லரில் காட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு. பின்னணியில் MSD forever போஸ்டர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள்.

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

வயதான லுக்

அப்பா விஜய் ரோலுக்காக விஜய் வயதான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். வயதான பிறகும் அவரால் missionல் பங்கேற்று பாம் வைக்கும் வில்லன் மோகனின் திட்டத்தை முறியடிக்க முடியுமா?

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

 கள்ளக்காதல்.. சந்தேகம்

விஜய் மீது அவரது மனைவி சினேகா சந்தேகப்படும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்று இருக்கிறது. அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாரா என சந்தேகப்படுவதாக சினேகா கூறுவது போல ஒரு காட்சி ட்ரெய்லரில் இடம்பெற்று இருக்கிறது.

அரசியல் குறியீடு முதல்.. ஆன்மீகம், MSD forever வரை! GOAT ட்ரெய்லரில் இதை எல்லாம் கவனித்தீர்களா | Vijay S Goat Trailer Did You Noted This Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments