Sunday, December 22, 2024
Homeசினிமாஅரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுகிறது.. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தவெக கட்சி தலைவர் விஜய் அதிரடி

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுகிறது.. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தவெக கட்சி தலைவர் விஜய் அதிரடி


தளபதி விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான தளபதி விஜய் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பதிவை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி தற்போது வரை 35 பேர் காலமாகியுள்ளனர்.

வெளியிட்ட பதிவு

இதை குறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்”.

“கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது”.

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுகிறது.. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தவெக கட்சி தலைவர் விஜய் அதிரடி | Vijay Post About Kallakurichi Issue

“இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு பதிவை வெளியிட்டுள்ளார்.
 

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments