Wednesday, October 9, 2024
Homeசினிமாஅரவிந்த் சாமி என்னைப்பார்த்து சொன்ன அந்த விஷயம்... ஓபனாக கூறிய சன்டிவி மூன்று முடிச்சு சீரியல்...

அரவிந்த் சாமி என்னைப்பார்த்து சொன்ன அந்த விஷயம்… ஓபனாக கூறிய சன்டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி


மெய்யழகன்

96 படம் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பிரேம்குமார்.

இவர் அப்படத்திற்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

ரத்தம், கத்தி, துப்பாக்கி சத்தம் என இல்லாத ஒரு படமாக இந்த மெய்யழகன் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

96 படத்தில் காதலை பற்றி முழுக்க முழுக்க காட்டிய பிரேம்குமார் மெய்யழகன் படத்தில் உறவுகளின் அன்பை சொல்லும் விதமாக கதையை எடுத்துள்ளார்.


ஸ்வாதி


இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பவர் சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே.

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 தொடர் மூலம் பிரபலமான இவர் தற்போது சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய மூன்று முடிச்சு தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் இந்த படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், அரவிந்த் சாமியை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது, அவரது கலரை பார்த்து பிரமித்து போய்விட்டேன்.

அவரை கட்டிப்பிடிக்கும் காட்சி வந்தது, ஆனால் என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் பதட்டத்தோடு இருந்ததை பார்த்து அரவிந்த் சாமி என்னிடம் இயல்பாக இருங்கள், இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என சொல்லிக் கொடுத்தார்.

அரவிந்த் சாமி என்னைப்பார்த்து சொன்ன அந்த விஷயம்... ஓபனாக கூறிய சன்டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி | Swathi Konde About Arvind Swamy And His Character

எனக்கு அது சந்தோஷமாக இருந்தது, அவரை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் ஏதோ பல வருடம் பந்தம் இருப்பது போல அவர் நடந்துகொண்டார் என கூறியுள்ளார். 

அரவிந்த் சாமி என்னைப்பார்த்து சொன்ன அந்த விஷயம்... ஓபனாக கூறிய சன்டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி | Swathi Konde About Arvind Swamy And His Character

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments